அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2016 மார்ச் 29 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறை ஏலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி வழக்கில், அக்காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிளிநொச்சி பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரல்!
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் 7 நாட்களுக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழ...
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் – காரணத்தை ...
|
|