இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று – நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Monday, April 20th, 2020

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 303 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் பூரண குணமடைந்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

இதனிடையே மறு அறிவித்தல் வரை சட்டமா அதிபர் திணைக்களம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய தனியார் நிறுவன பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்து.

இந்நிலையிலேயே சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்றுமாலை சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவும் தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: