கடல் மாசுபாடு குறித்த இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வு – மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் சுற்றாடல்துறை அமைச்சர் வலியுறுத்து!
Wednesday, July 7th, 2021
சமுத்திரத்திற்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை கொட்டும் உலக நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச அமைப்புக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயுமாறு சுற்றாடல்துறை அமைச்சர் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் நாள் ஒன்றுக்கு 5.1 கிலோ கிராம் தனிநபர் கழிவுகள் கொட்டப்படுவதாக அந்த ஆய்வறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டில் தனிநபர் ஒருவரால் நாள் ஒன்றில் 500 கிராம் கழிவுகளே வெளியேற்றப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு சர்வதேச அமைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணி...
தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் - மஹிந்த தேசப்பிரிய !
சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு சில அமைச்சுக்கள் அமைதி காக்கின்றன – அமைச்சர் மஹி...
|
|
|


