காணாமற்போனோர் தொடர்பான வட மாகாணத்தில் சாட்சிப் பதிவுகள் நிறைவு!
Tuesday, May 10th, 2016
வட மாகாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை (11) முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி மையம்!
பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாணத்தில் அன்டிஜன் பரிசோதனை!
புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!
|
|
|


