அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது – வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி!

Saturday, March 10th, 2018

நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts: