அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 40 கடற்றொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு!

Friday, May 26th, 2023

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கொவிற் இடர்கால வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட உதவித்திட்டம் இன்றையதினம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 40 கடற்றொழில் பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டை அச்சுறுத்திய கொரோனா காலத்தில் தொழில் நடவடிக்கைகளுக்கு செல்லமுடியாது பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார தேவைகளுக்கான உதவியாக சேவா லங்கா நிறுவனம் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வந்திருந்தது

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அகன்ற பின்னர் குறித்த உதவித்திட்டங்கள் வழங்குவதும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த குறித்த 40 பயனாளர்களினது உதவித்திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டது.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பயனாளிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின கவனத்தக்கு தமது பிரச்சினையை கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைபுப்களுடன் கலந்துரையாடி  குறித்த பயனாளர்களுக்கான வலைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த 40 பயனாளர்களுக்குமான உதவித்திட்டம் இன்றையதினம் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டது.

கடற்றொழைில் நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்  எந்திரி தர்மரட்ணம் சாந்தாதேவி, சேவா லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உதவி திட்டத்தை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஜனாதிபதி தேர்தல்: மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டு யாரும் பெரும்பான்மை பெறாதுவிடத்து வெற்றி யாருக்...
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் -உணவுப்பொருள் இறக்குமத...