அதிகமாக பணம் அறவிட்டால் பேருந்து நடத்துனர்களது அனுமதிப்பத்திரம் இரத்து!

நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகமாக பணம் அறவிடும் பேருந்து நடத்துனர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் நேற்றையதினம் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அனேகமான பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணத்திருதம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து நடத்துனர்களுக்கு இது தொடர்பில் அறிவுரை வழங்கி அதன் பின்னரும் தொடர்ச்சியாக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மூன்று லட்சம் இளைஞர்கள் பதிவு செய்யப்படவில்லை!
அதிகரிக்கிறது வைரஸ் காய்ச்சல் : மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குற...
|
|