சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

Friday, December 30th, 2016

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் வைத்தியாசலை அமைப்பதற்கு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை அமைப்பதற்குரிய 1.5ஏக்கர் காணியை வைத்திசாலைச் சுற்றாடலில் உள்ளவர்களிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கின்றோhம். என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு 1000மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திலும், தென் பகுதியிலும் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு தலா 1000 மில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறுவர் வைத்தியசாலையானது மகாணத்தில் உள்ள போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அண்ணளவாக 1.5ஏக்கர் பரப்பளவான காணி தேவையாகவுள்ளது. போதனா வைத்தியசாலைச் சுற்றாடலில் இலகுவல் போக்குவரத்துச்  செய்யக்கூடிய மையப் பகுதியில் காணி உள்ளவர்கள், நன்கொடையாளர்கள் நிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு காணி தந்துதவ வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் பணிகள் ஆரம்பிக்கப்படாதவிடத்து ஒதுக்கப்பட நிதியானது வேறு பகுதிக்கு திருப்பப்படும் சாத்தியமுள்ளது. அடுத்த ஆண்டு இந்த நிதி வடபகுதிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை. காலியில் சிறுவர் வைத்தியசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இலங்கையில் தற்போது கொழும்பிலும் கண்டியிலும் மாத்திரமே சிறுவர்களுக்கான நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் அமைந்துள்ளன – என்ற அந்தப் பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna-Hospital-strike-newsfirst-626x3801

Related posts: