நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி திங்களன்று தீர்மானிக்கப்பபடும் – தேர்ல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Wednesday, June 3rd, 2020

நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்பதையிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடித் தீர்மானிப்பார்கள் என ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடியுள்ளனர். எனினும் திகதி அறிவிப்பு அடுத்தவாரமே நடக்கும் என்றும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் உள்ள போதும் அனைத்துக்கும் சட்டப் புத்தகங்களில் தீர்வை தேட முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் திகதியை தீர்மானிக்கும் முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளமைக்கு புறம்பாக பல பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டியுள்ளதாக பெபரலின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அனுமதியில்லாமல் அரசாங்கம் எவ்வாறு நிதிகளை செலவழிக்கப் போகிறது. தேர்தல் வாக்குச்சாவடிகளாக பாடசாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. அஞ்சல் வாக்காளர்கள் பலர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை போன்ற தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: