அடுத்த வாரம்முதல் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!

Monday, May 2nd, 2022

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் பல்பொருள் அங்காடிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல், பல்பொருள் அங்காடிகள் மூலம், நுகர்வோருக்கு உரிய அரிசி தொகை கிடைக்கும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது நுகர்வோர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒரு கிலோ நாட்டு 145 ரூபாவாகவும் ஒரு கிலோ சம்பா அரிசி 175. ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: