இலங்கையில் 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, June 28th, 2021

இலங்கையில் இதுவரை 26 இலட்சத்து 32 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினத்தில் மாத்திரம் 29 ஆயிரத்து 327 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் 15 இலட்சத்து 65 ஆயிரத்து 521 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 20 ஆயிரத்து 345 பேருக்கு செலுத்தப்பட்டது.

இதனையடுத்து 5 இலட்சத்து 13 ஆயிரத்து 195 பேருக்கு இதுவரையில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 3 இலட்சத்து 72 ஆயிரத்து 899 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்த 14 ஆயிரத்து 795 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: