ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!
Wednesday, June 16th, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் அக்கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்திருந்தது.
கடும் இழுபறிக்கு மத்தியில் கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர், குறித்த நியமனத்திற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யோஷிதவின் வீசா விண்ணப்பத்தை நிராகரித்தது அவுஸ்திரேலியா!
சமூக மேம்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவர் டக்ளஸ் த...
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு - காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுமாறு பொதுமக...
|
|
|


