சமூக மேம்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே!

Sunday, January 14th, 2018

எமது கிராமத்தில் அறநெறிப் பாடசாலையை நிறுவுவதற்கும் அது வளச்சியடைவதற்கும் பிரதான பங்கு வகித்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என உரும்பிராய் வடக்கு ஶ்ரீ நாகலிங்கேஸ்வரர் அறநெறிப்பாடசாலைச் பொறுப்பாசியரினர் பொறுப்பாசிரியர் திருமதி விஜிதன் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உரும்பிராய் வடக்கு ஶ்ரீ நாகலிங்கேஸ்வரர் அறநெறிப்பாடசாலையில் மாணவர் கௌரவிப்பு விழா இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஆரம்பகாலங்களில் பல வசதியீனங்களுக்கு மத்தியில் இந்த அறநெறிப் பாடசாலையை நாம் ஆரம்பிப்பதற்கு எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தது மட்டுமல்லாது அதற்கான நிதிப் பங்களிப்பையும் வழங்கியிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே.

இன்று இந்த அறநெறிப் பாடசாலையில் 150 இற்கும் அதிகமானவர்கள் கல்விகற்று வருகின்றார்கள் என்று நாம் பெருமைகொண்டாலும் உண்மையிலேயே பல்வேறு வசதியீனங்கள் இங்கு காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகும்..

ஆன்மிகத்துக்கு மட்டமன்றி சமூகப் பொது வாழ்வுக்கும் முழுமையான பங்களிப்பு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார்.

எனவே இனிவருங்காலத்தில் மக்களாகிய நம் சரியானதொரு அரசியல் தலைமையாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரித்து அதனை வெற்றிபெறச் செய்வதனூடாக இதுவரை முழுமைப்படுத்தமுடியாது காணப்படும் அபிவிருத்திகளை உரியவகையில் பூர்த்த்திசெய்து கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில் இங்கு மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இந்து மயானம் இருக்கின்றமையானது இப்பகுதி மக்களுக்கு பேரிடராக இருப்பது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேபோன்று வீதிப்புனரமைப்பு இங்குள்ள கோயிலுக்கான மண்டபம் உள்ளிட்ட இதர தேவைகள் தொடர்பிலும் மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவற்றுக்கும் வரவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது கட்சி வெற்றிற்று  உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: