நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு துறைசார் தரப்பினர் அறிவுறுத்து!
Monday, July 8th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அப்பிரிவின் விசேட மருத்துவர் லஹிரு கொடுத்துவக்கு இது தொடர்பில் தெரிவிக்கையில், காய்ச்சல் 48 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நீடித்தால் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில் 27 ஆயிரத்து 755 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இந்நிலையில் டெங்கு நோயினால் 09 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாடளாவிய ரீதியில் 13 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு - அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ...
|
|
|


