யாழ்ப்பாணத்தில் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க  பேரணி!

Thursday, June 30th, 2016

யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேரணி இன்று(30) காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த பேரணியில் மாணவர்கள், பொது மக்கள், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். சித்திரவதையினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினமான யூன் 26 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாக இந்த பேரணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

parani-1

parani-2

parani-4

Related posts:

கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்: நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அ...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களா...
வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்ப...