நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரணம் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021

நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள  சுகாதார அமைச்சு எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ளவர்களில் 64 சதவீதமானோர் ஒரு தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர். அத்துடன் 52 சதவீதமானோர் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொண்டுள்ளனர் எனவும் குறிழத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

20 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளை கேட்டுள்ளார்.

30 வயதிற்கும், 20 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 41 சதவீதமானோருக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திண...
60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமா...
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத் தொகை - பொது நிர்வாக அமைச்...