மாணவர் சீருடை பெறுவதற்கான வவுச்சர் நவம்பரில் விநியோகம்!
Monday, September 19th, 2016
அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்குமான இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் முதலாம் வாரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தைப் போன்று இம்முறை சீருடை கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் வருகை தரத் தேவையில்லையெனவும், வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ள கூப்பன்களில் மாகாணம், கல்விக் காரியாலயம் மற்றும் குறித்த பாட சாலை என்பனவற்றைக் கண்டறியும் வகையில் இரகசிய இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்.

Related posts:
பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை அறிமுகம்!
வடக்கு - கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும் –...
|
|
|


