98 இலங்கை அகதி குடும்பங்கள் 2018 இல் நாடு திரும்பல்!

Thursday, March 1st, 2018

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை பணிமனையின் உதவியுடன் 2018ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 98 இலங்கை அகதி குடும்பங்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குடும்பங்களைச் சேர்ந்த 223 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தமது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தப் பணி ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் நாடு திரும்பலுக்கான தன்னார்வ திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பணிமனைகுறிப்பிட்டுள்ளது.

Related posts: