20 பாடசாலைகளுக்கான விசாரணை இம்மாதம் பூர்த்தி!

Tuesday, February 14th, 2017

தேசிய பாடசாலைகளில் முதலாமாண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசார ணைகளை இம் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜே.அயிலபெரும இதுதொடர்பாக தெரிவிக்கையில்

20 தேசிய பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை  இம் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரி, காலி, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பிரபல பாடசாலைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ன.

தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இதுவிடயம் குறித்து பல்வேறு முறைப்பாடுகளை கல்வி யமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவர்களை முதலாமாண்டுக்கு இணைத்துக் கொள்ளும் போது, பல குறைபாடுகள் காணப்பட்டதாகவும் இந்த முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் கல்வியமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜே.அயிலபெரும குறிப்பிட்டார்.

investigation-630x2861

Related posts: