விபத்துகளில் 17 பலி – பொலிசார் தகவல்!

Monday, January 3rd, 2022

நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகள் உட்பட பல்வேறு விபத்துகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில் 14 பேர் வீதி விபத்துகள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கறுவாத்தோட்டம், மாலபே, பண்டாரகம, வரக்காபொல, நிவித்திகல, கல்கமுவ, பதுளை, அக்கரைப்பற்று, ஓபாத, வெலிஓயா, ஹங்வெல்ல, அக்குரஸ்ஸ மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே குறித்த விபத்துகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே பதவிய மற்றும் வாரியப்பொல ஆகிய இடங்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகி யுள்ளன எனவும், எலபாத்த பகுதியில் உள்ள வீடொன் றில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: