வவுனியாவில் உணவகம் ஒன்று தீக்கிரை!

Thursday, January 20th, 2022

வவுனியா –  வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (20) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபான விற்பனையுடன் கூடிய உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர சபையின் தீயணைப்பு பிரிவினரால், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் உணவகம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

உணவகத்தில் தீ பரவியமைக்கான காரணம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணைகளை மன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: