சிங்கள மக்களும் சமஷ்டியை கோர வேண்டும் : அமைச்சர் ராஜித!

Friday, April 28th, 2017

1947 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் வரை நாடாளுமன்ற முறையின் கீழ் கிராமிய சிங்கள சமூகம் வளர்ச்சியடையவில்லை என்பதால், தென் பகுதி சிங்களவர்களுக்கு சமஷ்டி கிடைக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சிரார்த்த தின சிறப்புரையில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ராஜித, செல்வநாயகம் என்பவர் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கொள்கையில் உறுதியான மனிதர்.

வடக்கு, கிழக்கிற்கு சமஷ்டி அதிகாரத்தை கோரிய அவர், 1957 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோருடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு இணக்கப்பாட்டுக்கு தயார் என்பதை வெளிப்படுத்தினார்.

தெற்கின் தீவிர இனவாத அரசியல் காரணமாக அப்போது தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது போனது. அத்துடன் கடந்த 70 ஆண்டு காலத்தில் அதிகாரம் கொழும்புக்கு மட்டு வரையறுக்கப்பட்டிருந்ததால், தென் பகுதி அபிவிருத்தியடைவில்லை.இதனால், நிரந்தர மற்றும் அமைதியான நாடாக நாட்டை அபிவிருத்தி செய்யவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களை சமநிலையில் கருதவும் தென் பகுதி மக்களும் சமஷ்டியை கோர வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: