யாழ். மானிப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது 

Thursday, July 20th, 2017

யாழ். மானிப்பாய் ஆனந்த வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (18) மானிப்பாய்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார்ச் சைக்கிளொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 கைதான இருவரும் சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Related posts: