யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

Tuesday, June 7th, 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09 ஆம் திகதி  வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

திசைமுகப்படுத்தல் நிகழ்வுகளின் அறிமுக நிகழ்வு  எதிர்வரும் 09 ஆம் திகதி  வியாழக்கிழமை   காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில்,  பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், பெற்றோரும் நிகழ் நிலையூடாக இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.  நிகழ்வுக்கான இணைப்புகள் புதுமுக மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், மற்றும் கைத் தொலைபேசிக் குறுந் தகவல்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இணைப்புகள் கிடைக்காதவர்கள்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி அலுவலகத்தின் 021 320 5486 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் அறிவித்துள்ளார்.

Related posts: