இலத்திரனியல் தொழில் நுட்பத்துடன் புதிய கொன்சியூலர் பிரிவு !

Tuesday, February 7th, 2017

வெளிவிவகார அமைச்சின் இலத்திரனியல் தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய கொன்சியூலர் பிரிவு நேற்று(06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது..

முன்னர் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு இரு நாட்கள் முதல் 6 மணித்தியாலங்கள் வரை பிடித்தன.இனிமேல் 15 நிமிடங்களில் இந்த சேவையை பெற முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

முன்னர் பழைய கட்டிடமொன்றில் இயங்கி வந்த கொன்சியூலர் பிரிவு இலங்கை வங்கி தலைமையகத்திற்கு முன்பாக (உலக வர்த்தக கட்டிடத்திற்கு அருகில் )உள்ள செலின்கோ கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று முதல் இயங்கி வருகிறது.

நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் இலத்திரனியல் ஆவண உறுதிப்படுத்தல் திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்து வைத்தார். இதன் போது முதலாவது சான்றிதழை சமர்ப்பித்து பிரதி வெளிவிகார அமைச்சர் ஹர்ச டி செல்வா உறுதிப்படுத்தி எடுத்தார்.

கொன்சியூலர் பிரிவினூடாக நாளாந்தம் 500 முதல் 600 பேர்கள் வரை இப்பிரிவுக்கு வருவதோடு 1200 முதல் 1500 ஆவணங்கள் வரை பரீட்சிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. முன்னர் ஆவணங்களை உறுதிப்படுத்த கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருந்ததோடு குறைந்த வசதிகளே கொன்சியூலர் பிரிவில் காணப்பட்டன.

இந்த நிலையில் குறைந்த நேரத்தில் வசதியான சேவை பெறும் வகையில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர: எதிர்காலத்தில் ஏனைய பிரிவுகளையும் இலத்திரனியல் தொழில் நுட்பத்திற்கு மாற்ற இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இதனுடாக மக்களுக்கு விரைவாக சிறந்த சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கு கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிடுகையில்:புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கொன்சியூலர் பிரிவை மாற்ற ஒருவருட காலம் பிடித்தது.இதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.நம்பகத்தன்மையுடன் சிறந்த சேவையை வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

coldig2067100143236952_5206775_06022017_ATT_CMY

Related posts: