முடக்க நிலையால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 700 கோடி ரூபா நட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட முடக்க நிலையினால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சுமார் 700 கோடி ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு 700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சருடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலம் வரையில் பேருந்துகள் ஒரே இடத்தில் தரித்து நின்ற காரணத்தினால் சிலவற்றில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளதாக கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் நிவாரணம் பெற்றுக்கொள்வது குறித்து போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: