மாற்றமடைகின்றதா வடமாகாண சபையின் அமைச்சரவை?
Monday, May 23rd, 2016
வடமாகாண சபையின் அமைச்சரவையில் இன்று மாலை மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமையினை வடமாகாண ஆளுநர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வடமாகாணசபை அமைச்சர்களின் செயற்பாடுகளில் திருப்தியற்ற நிலையில் அவர்களை மாற்றி புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும் என வடமாகாண சபையிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருந்தும் இன்றையதினம் சுகாதார அமைச்சரின் கீழ் உள்ள பெண்கள் விவகாரம் தொடர்பான அமைச்சுப்பொறுப்புகளை மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்கவுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உணவகத்தின் முன் நிறுத்தும் வாகனங்களால் தவிர்க்க முடியாத விபத்துக்கள் - சாவகச்சேரி மருத்துவமனை பாதை ...
இன்று வடக்கில் உச்சம் கொடுக்கும் சூரியன் !
சீரற்ற காலநிலை - நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் - சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர...
|
|
|


