மேலதிக ஊழியர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்கத் தடை !

அரச நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்று நிருபத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைப்பு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
ரயில் தண்டவாளம் அருகே படுத்தவரின் கை பறிபோனது - கொக்குவில் புகையிரத நிலையமருகே விபத்து!
சீன தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பு!
|
|