மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்!
Saturday, November 12th, 2016
சட்டவிரோதமாக் கடலாமையைப் பிடித்து வெட்டிய மீனவர்கள் நால்வரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மண்டைத்தீவுக் கடற்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், ரோலர் படகு ஒன்றைச் சோதனையிட்டனர்.
இதன்போது, குறித்த படகுக்குள் உயிருள்ள ஆமை மற்றும் ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து, குருநகரைச் சேர்ந்த மீனவர்கள் நால்வரையும் கைதுசெய்த கடற்படையினர். யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று (11), குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.மீட்கப்பட்ட உயிருள்ள ஆமையைக் கடலில் விடும்படியும் ஆமை இறைச்சியை அழிக்குமாறும் நீதவான் இன்போது உத்தரவிட்டார்.குறித்த மீனவர்களின் படகு, கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|