புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி – பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிப்பு!

Monday, April 11th, 2022

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தை காட்டிலும், மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணிகளால் பொதுமக்களின் பட்டாசு கொள்வனவு குறைவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களில், பலர் தற்போது தங்களது தொழிற்துறையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் அதிகமானோர் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டனர்.

எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரமே இந்த தொழிற்துறையை முன்னெடுப்பதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கை கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது – ஒன்று கூடினால் ஐரோப்பாவை போன்று ...
கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்...
ஜனாதிபதி இராஜினாமா செய்தால் நாடு மேலும் சின்னா பின்னமாகும் - இடைக்கால அரசாங்கமே நெருக்கடிக்கான ஒரே த...