போதைப்பொருள் வைத்திருந்தவர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது!

Wednesday, June 22nd, 2016

யாழ்ப்பாணம் குருநகர் சிறுவர் நீதிமன்றப்பகுதியில் வைத்து 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று மதியம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

நேற்றையதினம் குறித்த பகுதியில் வைத்து 120 கிராம் கஞ்சாவுடன் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இன்றையதினம் குறித்த நபரை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்திருந்தனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: