கிணற்றில் தவறி வீழ்ந்து யுவதி உயிரிழப்பு!
Tuesday, June 28th, 2016
வேலணை, 5ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியினை எடுக்க முற்பட்ட யுவதி தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து நேற்று (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற யுவதியே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார்.
Related posts:
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதியில் கழிவுகள் கொட்ட வேண்டாம்!
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்ப...
இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன - வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெட...
|
|
|


