முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க!

Sunday, July 24th, 2022

தற்போதைக்கு முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என்று அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் வழமை போன்று இயங்கும் நிலையை உருவாக்கவும், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கவும் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டின் தற்போதுள்ள ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போதைய ஆளுநர்கள் பலர் இன்னும் சில நாட்களில் பதவி விலக உள்ளனர்..

இதேவேளை, அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது

இதனிடையே, தற்போதை அரசாங்கத்திற்கு அதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிக்க கோரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!
பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் இல்லை – நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு ஜ...
இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு!