புல்லைப் பதப்படுத்தி பயன்படுத்த பண்ணையாளர்களுக்குப் பயிற்சி!

Saturday, February 2nd, 2019

மாடுகளுக்கான புல்லை அனைத்துக் காலத்திலும் தடையில்லாது வழங்கும் நோக்குடன் புல்லைப் பதப்படுத்தும் முறை தொடர்பாகப் பண்ணையாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றது என்று மாவட்டக் கால்நடை உற்பத்திச் சுகாதாரப் பராமரிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பால் உற்பத்திக்காக பண்ணையாளர்கள் புல் வளர்க்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளை வைத்திருப்பவர்கள் புல் மற்றும் புண்ணாக்கு போன்றவற்றைத் தீவனமாக வழங்கலாம். ஆனால் பண்ணையாளர்களுக்கு இந்த தீவனம் அதிகளவில் தேவைப்படுகிறது. பால் அதிகம்  சுரக்கக்கூடியதும் இலகுவில் வளர்க்கக் கூடியதுமான சி.ஒ 3 வகை புல்லை உற்பத்தி செய்வதற்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அனைத்துக் காலத்திலும் புல் கிடைக்காது. அதைப்போன்று நோய்த் தாக்கம் ஏற்பட்டால் புல் அழியும் நிலமையும் உள்ளது. புல் உற்பத்தி குறைந்தால் பால் உற்பத்;தியும் குறையும். இவற்றைக் கருத்திற்கொண்டு புல்லைப் பதப்படுத்தி வைத்திருக்கும் சைலோஜ் முறை தற்போது பண்ணையாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றது.

புல் அதிகம் கிடைக்கும்போது சீனிக் கரைசலுடன் சேர்த்துப் புல்லைப் பாதுகாக்கும் இந்த இலகுவான முறை மூலம் 6 மாதங்கள் வரைப் புல்லைச் சேமிக்க முடியும். இது சிறந்த போசாக்குத் தன்மையுடன் இருக்கும். புல் தட்டுப்பாடான காலத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும். இது தொடர்பான பயிற்சிகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

நடப்பு வருடத்தில் யாழ் மாவட்டத்தில் 16 பேருக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுப் புல் வெட்டும் உபகரணமும் வழங்கப்பட்டுள்ளன.

Related posts:


கொரோனா தொற்றின் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பேராபத்து – பொதுமக்களுக்கு வைத்தியர்கள் க...
தொழிற்சங்க நடவடிக்கை - தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு - தபால் மா அதிபர் ...
4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்தனர் – உறுதிப்படுத்தியு...