கொரோனா தொற்றின் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பேராபத்து – பொதுமக்களுக்கு வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!

Tuesday, June 2nd, 2020

கொரோனா தொற்றின் மத்தியில் இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதன் வேகம் மேலும் அதிகரிக்கும்.

பொது மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். எலிக்காய்ச்சல் பாக்டீரியா மூலம் பரவும் நோயாகும். எலி, பெருச்சாலி, எறுமை மாடு போன்றவற்றினால் இந்த பாக்டீரியா பரவுகின்றது.

விலங்குகளின் சிறுநீரகங்களில் வாழும் பாக்டீரியாக்கள் சிறுநீருடன் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. நெல் வயல்கள் போன்ற நீர் அதிகம் கொண்ட பகுதிகளில் பாக்டீரியாக்கள் ஏராளமாக வாழ்கின்றன. நீரில் உள்ள பாக்டீரியாக்கள் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கண்கள் மற்றும் வாய் போன்றவைகளினால் உடலில் நுழைகின்றன.

இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், தொண்டை புண், தசை வலி மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு மேலதிகமாக கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தில் குறைவு போன்ற அறிகுறிகளே காணப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே சென்றால் இலகுவாக காப்பாற்றி விடலாம்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - ஆணையாளர் நாயகம் அறிவ...
கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கல...
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...