வளலாயில்  மீள்குடியேற்றப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரித்தானியா அரசு துரித நடவடிக்கை எடுக்கும்-  இலங்கைக்கான பிரித்தானியாவின்  தூதுவர்  ஜேம்ஸ் டொரிஸ் உறுதி!

Friday, June 10th, 2016

யாழ். வளலாய் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணிகள் தொடர்பில் பல்வேறு விடயங்களை எடுத்து கூறியுள்ளதாகவும், அதற்கான பூரணமான விடயங்களுக்குப்  பிரித்தானியா அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்கும் என இலங்கைக்கான பிரித்தானியாவின்  தூதுவர்  ஜேம்ஸ் டொரிஸ் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகனிடம்  உறுதி மொழி அளித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானியாவின்  தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் அடங்கிய இருவர் அடங்கிய குழுவினர் இன்று-10 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ  விஐயமொன்றை மேற்கொண்டார்.  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்ட குறித்த குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச்  சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திகள், உட்கட்டுமானங்கள், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,

குறிப்பாக  யாழ். உயர்பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் பல்வேறு தேவைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  குறிப்பாகத் தேசிய நல்லிணக்கத்தின் பின்னர் நாட்டில்,  குறிப்பாக யாழ். மாவட்டத்தின் தற்போதைய மக்களின் நிலைமைகள் எவ்வாறு  உள்ளன?  அவ்வாறான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபரின் பங்கு எவ்வாறு அமைந்துள்ளது? என்பது பற்றி உயர்ஸ்தானிகர் என்னிடம் கேட்டார்.

இதற்கு நான் பதில் தெரிவிக்கையில் மக்களின் புரிந்துணர்வுகளின் பங்கு மிக மிகக்  குறைவாக இருக்கின்றது. அவற்றில் மக்களின் பங்கு கட்டியெழுப்ப முடியாதுள்ளதாகவும், அவற்றிலிருந்து  மக்கள் படிப்படியாக முன்னேற என்ன வேலைத்திட்டங்கள் முடியுமோ? அவற்றினை எதிர்காலத்தில் செயற்படுத்தவுள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தான்  தெரிவித்ததாக  அரசாங்க அதிபர் ஊடகங்களுக்குத்  தெரிவித்தார்.

a7342f6a-aac7-4dd8-9c5a-d4091478d423

cf494f5a-b37f-42de-b437-e8367ba79ca3

ac74edab-cb57-48d3-bfee-89757e6ceb5b

Related posts: