புகையிலை செய்கைக்கு பதிலாக மாற்றுப்பயிர்ச் செய்கை திட்டம்!

Wednesday, August 1st, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் புகையிலைச் செய்கைக்குப் பதிலாக மாற்றுப் பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் பணிமனையினால் மேற்படி வேலைத்திட்டம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கரடிப்பிலவு 17 ஆம் கட்டை பழம்பாசி ஆகிய விவசாயக் கிராமங்களிலிருந்து 32 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான 6.4 கிலோகிராம் மிளகாய் விதைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் விவசாயத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: