வலிகாமம் பகுதியில் கடும் மழை
Wednesday, April 20th, 2016
யாழ்.குடாநாட்டில் கடந்த பல நாட்களாகக் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(19-) பிற்பகல் வலிகாமத்தின் பல இடங்களிலும் கடுமையான மழை பெய்துள்ளது. மழை காரணமாகப் பொதுமக்களும் , விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வலிகாமம் தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளின் பல இடங்களிலும் இந்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
வலிகாமத்தின் சில இடங்களில் கடந்த வாரமும் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
யாழ் குடாநாட்டில் வெயிலின் கொடுமையால் அண்மையில் வயோதிபரொருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தமையும், அடிக்கடி வெயில் காரணமாகப் பலரும் மயங்கி விழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதுடன் பகல் வேளையை விட இரவு வேளைகளில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலிகள் தொடர்பிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
இலங்கை வந்தடைந்தது சீனாவின் சினோபாம் - நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...
|
|
|


