வலி.தெற்கில் டெங்கு நோயாளர் அதிகரிப்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரம்!

Sunday, January 8th, 2017

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதுவருடத்தின் முதல் நான்கு தினங்களில் மட்டும் 11பேர் டெங்குக் காய்ச்சலின் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர்கள் உரும்பிராய்ப் பகுதியில் டெங்கைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவத் இ.மகேந்திரன்  தலைமையில் 35ற்கும் மேற்பட்ட அலுவலர்களைக் கொண்ட அணி 4 குழுக்களாக மேற்கொண்டு வருகின்றது.

கோப்பர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 145 பேர் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகியபோதிலும் இந்த வருடம் முதல் 4 தினங்களில் மட்டும் 11பேர் டெங்குத் தாக்குதலுககு உள்ளாகியுள்ளமை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரும்பிராய்ப் பகுதியில் டெங்குநோய்க் கட்டுப்பாடு நடவடிக்கையில் மருத்துவ மாதக்கள், கிராம அலுவலர்கள். சமுர்த்தி அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி அலுவலர்கள், பொலிஸார், சுகாதாரத் தொண்டர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், அலுவலக அதிகாரிகள், வலி.கிழக்குப் பிரதேச அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளடங்கலாக 35க்கு மேற்பட்டவர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து ஈடுபட்டுள்ளனர். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பது டெங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உரும்பிராய்ப் பகுதியில் டெங்கு பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளை பொதுமக்கள் உரியமுறையில் அனுசரிக்கத் தவறுவதும் தான் காரணம் எனச் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tamil-Daily-News_92916071415

Related posts: