பருத்தித்துறை கெருடாவில் இந்து மயானம் சிரமதானம்!

பருத்தித்துறை பிரதேச கெருடாவில் முதலாம் வட்டார மக்களின் பயன்பாட்டிலுள்ள காட்டுப்புலம் இந்து மயானம் ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியின் ஏற்பாட்டில் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக கவனிப்பாரற்று பல்பூண்டுகளால் காட்சியளித்திருந்தது இன்நிலையில் ஈழமக்கள் ஐனநாயக்க்கட்சியின் கெருடாவில் வட்டார நீர்வாகத்தினர் ஏற்பாட்டில் மேற்படி சிரமதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் வல்வெட்டித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட காட்டுப்புலம் இந்து மயானத்தை கெருடாவில் கிழக்கு கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு வடக்கு தெண்டைமானாறு தெற்கு பெரிய கடற்கரை சின்னக்கடற்கரை செம்பாடு சந்நதி சீலாப்புலம் இமையிலியதனை போன்ற பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.
இவ் மயான சிரமதான நிகழ்வில் கெருடாவில் முதலாம் வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் உட்பட பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கட்சி ஆதரவாளர்கள் கட்சி இளைஞரணியினர் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
Related posts:
|
|