ஐயாயிரம் சைவ சமயப் பிரசாரகர்களை உருவாக்கும் பயிற்சி நெறி யாழில் ஆரம்பம்!

Monday, September 5th, 2016

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை முழுவதும் ஐயாயிரம் சைவ சமயப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் பயிற்சிக் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு கடந்த சனிக்கிழமை(03) முற்பகல் யாழ்ப்பாணம்  பருத்தித்துறை ஆனைப்பந்தியிலுள்ள குருகுல மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு யாழ். சின்மயா மிஷன் நிறுவனத்தின் தலைவர் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் ஆசியுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக இந்து நாகரீகத் துறைத் தலைவர் பேராசிரியர் மா. வேதநாதன், பேராசிரியர்- நாச்சியார் செல்வநாயகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பயிற்சி தொடர்பான அறிமுகவுரைகளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் நிகழ்த்தினர். விசேட உரையை சைவத் தமிழ் புரவலர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் நிகழ்த்தினார்.

இளையோரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறிக்காக முதற்கட்டமாக 40 வயதுக்குக் குறைந்த 40 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் ஆர்வ மேலீட்டால் பத்து வரையான முதியவர்களும் குறித்த பயிற்சி நெறியில் இணைந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed

Related posts: