பதவிக்காக அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?

Monday, May 8th, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட அடுத்த நிலையில் உள்ளவர் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து துணைவேந்தராக வந்திருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைவேந்தர்கள் இவ்வாறு அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து பதவிக்கு வந்தால் மாணவர்கள் மதிப்பார்களா? விரிவுரையாளர்கள் மதிப்பார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் தலையீடுகளால் புத்திஜீவிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். புத்தி சாதூரியம் மிக்கவர்கள் பொறுப்புகளில் அமர்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 140 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை இடம்பெற்றது. அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே யாழ். ஆயர் இவ்வாறு கூறினார்.

Related posts: