சிறந்த நிர்வாக சேவை அதிகாரி சிவஞானசோதி காலமானார்!

Tuesday, April 6th, 2021

சிறந்த நிர்வாகியும் இலங்கையின் அமைச்சரவை அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக இருந்து, தமிழர் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட சித்தங்கேணியை சேர்ந்த வே.சிவஞானசோதி நேற்று (05) காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு – அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  அவர் நேற்றையதினம் காலமானார்.

முன்பதாக சிறந்த கல்விமானும் திறமையான நிர்வாக அதிகாரியுமான இவர், இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளில், அமைச்சுக்களின் செயலாளராக பதவி வகித்த ஒருவராக திகழ்கின்றார்.

குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் புனர்வாழ்வு புனரமைப்பு. மீள்குடியேற்ற அமைச்சு, சசுக சேவைகள் அமைச்சு, இந்து கலாசார அமைச்சு, பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, போன்ற அமைச்சுகளிலும் மற்றும்  நல்லிணக்க அமைச்சு போன்றவற்றின் செயலாளராகவும் செயற்பட்ட ஒருவராவார்.

தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றிவந்திருந்த நிலையில் நேற்றையதினம் காலமானர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து அவரது ஆலோசனையின் பிரகாரம் தமக்கு கிடைத்த பதவியைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசத்திற்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்து பல திட்டங்களை மேற்பார்வை செய்து திறமையாக செய்து முடித்த பெருமைக்குரியவராகவும் இவர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: