நாட்டுக்கு எதிரான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது – அமைச்சர் சந்திம வீரக்கொடி!

Thursday, September 7th, 2017

நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும்  கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்அரசாங்கம் சர்வதேச ரீதியாக வெற்றி கொண்டுள்ள ஒத்துழைப்பு ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் மூலம் புலப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் சர்வதேச ரீதியாக வெற்றி கொண்டுள்ள ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது விசேடமாக நாட்டின் அபிவிருத்தி, சகவாழ்வு செயற்பாடுகளை வலுவாக முன்னெடுப்பதற்கும், ஜனநாயக செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும் என்று சர்வதேச தலைவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்தார்..

Related posts: