பூநகரி தெற்கு வலய பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகத்துக்கு டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Tuesday, May 17th, 2016

பூனகரி வலைப்பாடு கிராமத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் நீர்ப்பாவனை நெருக்கடியை கவனத்தில் கொண்டு கடந்த ஆட்சிக்காலத்தில் இங்குள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர்  டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து வலைப்பாட்டு பகுதியையும் உள்ளடக்கி பூனகரி தெற்கு வலயத்தின் கீழ்வரும் 9 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான குடிநீர் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  அதனை நடைமுறைப்படுத்தவென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் கடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இந்த குழாய்நீர் விநியோகத்திட்டத்தை முன்னெடுப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டன.

பின்னர் பாராளுமன்ற தேர்தலை அடுத்து உருவான தற்போதைய நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் இத்திட்டத்துக்கு  தேவையான நிதியை ஒதுக்கி நீர்விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இதுவரை இத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பதயும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பிந்தியதாக இவ்விவகாரம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டவரப்பட்டதை அடுத்து இத்திட்டத்துக்கான  அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து Nதுவையான நிதியை ஒதுக்கி நீர்விநியோகப் பணிகளை துரிதப்படுத்தவிருப்பதாக கடந்த மாதம் அவர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து இப்பகுதிக்கான நீர் விநியோக குழாய்களை பொருத்துவதற்கான மதிப்பீட்டு பணிகள் ஆரப்பிக்கப்பட்டிருந்ததோடு  நிலஅளவீட்டு பணிகளையும் கடந்த மாதம் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தார்கள்.

இருந்தும் இந்நீர் விநியோகத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்தும் தேக்க நிலையில் இருந்து வருவதை அடுத்து நிலமைகளை நேரடியாக அவதானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இப்பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

Related posts: