எம்.ஆர். லதீப்பிற்கு நியமனம் வழங்காமை குறித்து பொலிஸ் மா அதிபர் –  பொலிஸ் ஆணைக்குழு  இடையில் முரண்பாடு?

Wednesday, August 17th, 2016

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியாக எம்.ஆர். லதீப்பிற்கு நியமனம் வழங்காமை குறித்து இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியாக எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், இந்த நியமனத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக நியமனம் வழங்கப்படவில்லை என்பது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோர தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வாய் மொழி மூலமும் எழுத்து மூலமும் விளக்கம் கோரப்பட உள்ளது.இது பற்றி நாளை பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பிரதிநிதிகள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. நாளைய சந்திப்பின் போது விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியாக ஏன் லத்தீப் நியமிக்கப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட உள்ளது..

விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியாக லத்தீப் நியமிக்கப்பட்ட கடிதம் கடந்த 9ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பொலிஸாரால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி...
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!