மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் – சர்வதேச மனித உரிமைகள் தினச் செய்தியில் பிரதமர் உறுதி!

Thursday, December 10th, 2020

மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவருடைய அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், தாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமையை பாதுகாத்து, ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கட்டுப்பட்டிருந்ததாகவும் சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கையின் ஊடாக, அனைத்து மக்களதும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டினதும் குடிமக்களினதும் நற்பேறுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் மனித சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில் அடிப்படை உரிமைகள் போன்றே தேவைகளுக்காகவும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போன்றே, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றி கொண்டு, தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு இம்முறை மனித உரிமைகள் தினத்தில் கைகோர்க்குமாறும் பிரதமர் அந்த அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ் மாநகரின் கரையோரத்தில் இடிதாங்கி அமைப்பதில் பின்நிற்பது ஏன்? - ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பின...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் ந...