க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மடிக்கணனி!

Monday, August 29th, 2016

கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர  பரீட்சையில்  சிறப்பாகச் சித்தியெய்திய 12 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவதாக சிங்கர் நிறுவனம் தெரிவித்தி ருந்தது.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு   ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட   நிகழ்வில்   கணனிகளை வழங்கிவைத்தார்.

இலங்கை மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதே தமது நோக்கம் என்று கூறிய சிங்கர் நிறுவன அதிகாரிகள், போட்டிகள் நிறைந்த இன்றைய நிலையில் இந்தக் கணனிகள் மாணவா்களுக்கு பெரும்  உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்

Related posts: