கொரிய பரீட்சைகு விண்ணப்பம் கோரல்!

Tuesday, June 14th, 2016

கொரிய தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை விநியோகிக்கப்படவுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலகங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் 18 தொடக்கம் 39 வயதுக்குள் இருக்க வேண்டும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இம்முறை உற்பத்தி மற்றும் கடற்றொழில் என்பவற்றுக்கு தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணியகத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் பரீட்சைக்கு தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும். இந்த பரீட்சை ஜூலை மாதம் இடம்பெறவுள்ளது. ஒன்லைன் முறையில் இடம்பெறவுள்ள இந்த முறை பரீட்சை, கொரிய கணனி மையங்களில் இடம்பெறவுள்ளது.இது தொடர்பான மேலதிக விபரங்கள் வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்று கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: