அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்றும் 5 பேர் மரணம்!
Friday, December 4th, 2020
நாட்டில் இதுவரை 26 ஆயிரத்து 38 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 877 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துதுளளளது.
அத்துடன் நாட்டில் கொவிட்19 நோயில் இருந்து மேலும் 728 பேர் நேற்று குணமடைந்தனர். தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர்களில் 19 ஆயிரத்து 32 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
கொவிட்19 காரணமாக நேற்று 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொவிட்-19 நோயால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் 215 தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் - குழப்பத்தில் மக்கள்!
வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை 29 ஆம் திகதியுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு!
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு!
|
|
|


